குட் டச்! பேட் டச்! : நமீதா அட்வைஸ்

‘சாயா’  படத்தின் பாடல் வெளியீட்டு வழாவில் இன்று உருக்கமாக பேசினார்  நமீதா.

“இந்தப் படம் ஒரு சமூகத்துக்கு நல்ல தொரு  கருத்தைச்  சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ந்தேன்.  சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்.. செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் உள்ளன.  அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் செலுத்துகிறேன்.

"சாயா" பாடல் வெளியீட்டு விழா
“சாயா” பாடல் வெளியீட்டு விழா

இந்த “சாயா” படம், குழந்தைகளை பெற்றோர் வளர்க்கும் முறை பற்றி சொல்வதாக கூறினார்கள்.

எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆமாம். நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன். எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பேரண்ட் மாதிரி கவனித்துக்கொள்கிறேன்.

என் அண்ணனுக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றவர்,  நிமிட நேரம் தாமதித்து மீண்டும் பேச ஆரம்பித்தார்:

“ஒரு முக்கியமான விஷயம். பட்,  இந்த விஷயத்தை பற்றி பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். ஆனா நான் பேசப்போறேன்.

விழாவில் நமீதா
விழாவில் நமீதா

இன்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நிறைய நடக்கின்றன. நம் அருகிலும்  நடக்கின்றன.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது. அதைத்தாண்டி  நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும்.

அது, குட் டச். பேட் டச்.

அதுமட்டுமல்ல.. குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள். நிறைய பேசுங்கள். இதை அம்மா, அப்பா இரண்டு பேருமே செய்ய வேண்டும்” என்று சீரியஸாக பேசி முடித்தார் நமீதா.

 

கார்ட்டூன் கேலரி