குட்பை!: விடைபெற்றார் டிடிவி தினகரன்

சென்னை:

கட்சியில் இருந்து எனக்கு இதுவரைக்கும் ஒத்துழைப்பு அளித்த நிரவாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நனறி

என்னை போனில் செங்கோட்டையன் நேற்று பேசினார். ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக  கூறினார். விளக்கமாக ஏதும் பேசவில்லை.

திடீரென கூட்டம் போட்டு என்னை நீக்குவதாக அறிவித்துள்ளார்கள். கடந்த 14ம் தேதிவரை என்னுடம் பேசிக்கொண்டிருந்தவர்கள்… ஒரு மனதாக என்னை துணைப் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டவர்கள்,.. திடீரென இப்படி ஒரு முடிவு எடுத்ததற்கு ஏதோ பயம் காரணமாக இருக்கலாம்.

ஒருவேளை நான் இருந்தால் கட்சிக்கு பலவீனம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

என்னிடம் நேரடியாக  சொல்லியிருநதாலே நான் ஒதுங்கியிருப்பேன். அவர்கள் அறிவித்தவுடனே ஒதுங்கிவிட்டேன்.

யாருடனும் சண்டை போடுவது என் சுபாவம் இல்லை. இன்று எம்.எல்.ஏக்களை நான் சந்திக் விரும்ப காரணமே, ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்லத்தான். மற்றபடி, எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக்கூட்டி பலத்தை நிரூபிக்க நான் நினைத்ததே இல்லை.

கட்சி பிளவுபட்டுவடிக்கூடாது. இரு அணிகளும் இணைந்து செயல்படட்டும். அதே நேரம் கட்சியையும் ஆட்சியையும் இவர்கள் காப்பாற்றாவிட்டால் தொண்டர்களுக்கு பதில் சொல்ல நேரிடும்” என்றார்.

மேலும், இதுவரை தனக்கு ஒத்துழைப்பு அளித்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார் டிடிவி தினகரன்.

அனைவரும் ற்றுமையாக இருங்கள். எக்காரணம் கொண்டும் கட்சி பிளவுபட்டுவிடக்கூடாது. எம்எல்.ஏக்கள் கூட்டத்தைக்கூட்டி பலத்தை நிரூபிக்க விரும்பவில்லை.

Leave a Reply

Your email address will not be published.