கூகுள் நிறுவனத்தின் தலைவராக மற்றுமொரு இந்தியர் நியமனம்!

கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவின் தலைவராக மற்றுமொரு இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகித்த தாமஸ் சூரியன் கூகுள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

cloud

இந்தியாவை சேர்ந்த குறிபாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வாக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் கிளவுட் பிரிவின் தலைமை பதவிக்கு இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த தாமஸ் சூரியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக அந்த பொறுப்பில் டயானா கிரீன் என்பவர் இருந்து வந்தார்.

இது தொடர்பாக டயானா வெளியிட்ட செய்தியில், “ தாமஸ் சூரியன் நவம்பர் 26ம் தேதி முதல் கூகுள் நிறுவனத்தில் இணைய உள்ளார். அவர் தனது பணியை 2019ம் தேதி முதல் தொடக்குவார். கூகுள் கிளவுட் தொழில்நுட்பத்தை தாமஸ் சூரியன் அடுத்த நிலைக்கு கொண்டு செல்வார் என நம்புகிறேன் “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தாமஸ் சூரியன் ஆரக்கிள் நிறுவனத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது அதயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் தலைவராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து டயனா கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தொடர உள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்து கிளவுட் பிரிவினை கவனித்து வந்தார். மேலும், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பட் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் டாயானா.