கூகிள் அசிஸ்டெண்டில் இனி தமிழுடன் 7 இந்திய மொழிகள்….

ம்ஜிஆர் ஒரு படத்தில் ’’ நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’’ என்ற பாடல் வரி வரும்,  எப்படிப்பட்ட தீர்க்கதரிசின பாடல் அது தெரியுமா? ஏனெனில் தொழில்நுட்பங்கள் வழியே இனி நாம் நேரடியாக தட்டச்சு செய்துதான் செல்பேசியையோ செயல்படுத்தவேண்டும் எனில் அவசியமில்லை. இனி குரல் வழியாகவே அனைத்துப்பணிகளையும் செய்யலாம்.

கூகிள் அசிஸ்டெண்ட் எனப்படும் செயலியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழிவழிக்கற்றல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயலி, இதன் மூலம் நீங்கள் குரல் வழியாகவும், தட்டச்சு வழியாகவும் என்ன கேள்விகள் கேட்டாலும்  கூகிள் அசிஸ்டெண்ட் உங்களுக்கு உதவி செய்யும். கூகிள் அசிஸ்டெண்டை உங்கள் உதவியாளர் போல வைத்துகொள்ளலாம்.

உதாரணத்திற்கு மருத்துவரிடம் முன்பதிவு செய்யவேண்டுமா? கூகிஸ் அசிஸ்டெண்டிடம் தேதி நேரம், கடையின் பெயர் சொல்லிவிட்டால் போதும், அதுவே குறிப்பிட்ட கடையை  தொடர்பு கொண்டு அந்தநேரத்தில் தேதியை முன்பதிவு செய்து உங்களுக்கு சொல்லிவிடும்.இதன் மூலம் நிகழும் அற்புதங்கள் நிறைய என்றாலும் எதிர்காலத்தில் கையெழுத்து ஒன்றையே மனிதன் பழக மாட்டான் 🙂

இதோ கூகிள் அசிஸ்டெண்ட் எப்படி இயங்குகிறது என்று கூகிள் நிறுவனத்தின் தலைவர் நம் தமிழர் திரு.சுந்தர் பிச்சை உரையாற்றும் காட்சி

இதற்கு முன் கூகிள் அசிஸ்டெண்ட் செயலியானது ஆங்கிலம் மட்டும் சில மொழிகளில் மட்டும் இயங்கி வந்தது. இப்போது இந்தியாவில் உள்ள 7 மொழிகளும் கூகிள் அசிஸ்டெண்ட்ல் இயங்கும். பெங்காலி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் உருது போன்ற மொழிகளிலும் கூகிள் அசிஸ்டெண்ட் இயங்கும்,

உங்கள் கூகிள் அசிஸ்டெண்ட் தமிழில் மொழியில் இயங்க தமிழை உங்கள் தேர்வு மொழியாக எடுத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் நேரடியாகவே கூகிஸ் அசிஸ்டெண்ட் மூலம் “Ok Google, talk to me in Tamil” என்று கொடுத்தால் கூகிள் அசிஸ்டெண்ட் தமிழில் உரையாட உங்களுக்கு வழிகாட்டும்

பிறகென்ன நீங்களும் முயற்சித்து பார்க்கலாமே…

ஜியோ செல்பேசியில் கூகிள் குரல் வழி தட்டச்சு அறிமுகம்

இந்தியாவில் மலிவு விலையில் ஜியோ செல்பேசிகளில்  KAIOS இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. ஜியோ  நிறுவனம் கொடுக்கும் ஜியோபோன், ஜியோபோன் 2  போன்ற செல்பேசிகளில அசிஸ்டெண்ட் தேர்வு செய்து குரல் வழியாகவும் தட்டச்சு செய்யலாம்என்றும் கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 7 new languages including Tamil, 7 இந்திய மொழிகள், Google assistant, JioPhones, voice typing’, கூகுள் அசிசென்ட்ட், கூகுள் அசிஸ்டென்டில் தமிழ், வாய்ஸ் டைப்பிங்
-=-