மொழி வேறுபாட்டை உடைக்கும் கூகுள் : புதிய வசதி அறிமுகம்

 

லாஸ் வேகாஸ்

கூகுளின் புதிய வசதி மூலம் மொழி தெரியாதவருடன் உரையாட முடியும்.

 

பல சுற்றுலாப்பயணிகளுக்கு உள்ளூர் மொழிகள் தெரிவதில்லை.   அது போல உள்ளூர் வாசிகள் பலருக்கு அவர்கள் மொழியை தவிர வேறெதுவும் தெரிவதில்லை.   இந்த மொழி வேறுபாட்டால் பலர் துயரப்பட்டு வருகின்றனர்.   அதுவும் இந்தியாவை போல் பல மொழிகள் பேசும் நாடுகளில் இது ஒரு பெரிய பிரச்னையாகவே உள்ளது.

லாஸ் வேகாஸ் நகரில் வாடிக்கையாளர் மின்னணு பொருட்காட்சி 2019 தற்போது நடந்து வருகிறது.   அதில் கூகுள் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.   கூகுள் அசிஸ்டெண்ட்  செயலியின் வசதியாக செயல்படும் அந்த வசதியின் பெயர் இண்டர்பிரட்டர் ஆகும்.   இந்த செயலியின் மூலம் குரல் அடையாளத்தைக் கொண்டு கூகுள் அசிஸ்டெண்ட் தேவைப்படும் மொழியில் மாற்றம் செய்ய உள்ளது.

இந்த வசதி விரைவில் கூகுளின் அனைத்து கருவிகளிலும் செயல்பட உள்ளது.   அதை இன்ஸ்டால் செய்த பிறகு, ஆங்கிலத்தில் நாம் எந்த மொழியில் கருத்துக்களை சொல்ல விரும்புகிறோம் என்பதை தெரிவித்தால் கூகுள் அசிஸ்டெண்ட் அதை அந்த மொழியில் மாற்றி அமைக்கும்.

தற்போது இந்த வசதி ஆங்கிலம், இந்தி, போலிஷ், இந்தோநேசியன், தாய், ஜெர்மன் உள்ளிட்ட 27 மொழிகளை உள்ளடக்கி இருக்கிறது.   விரைவில் இது அனைத்து உலக மொழிகளிலும் செயல்படும் என கூகுள் அறிவித்துள்ளது.   முதல் படியாக இந்த கண்காட்சியில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

You may have missed