சென்னை,

மிழகத்தில் கூகுள் நிறுவனத்தின் கிளை அமைக்கப்படும் என்று தமிழக தொழில்துறை  அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று தொழில் துறை  மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது.

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்  ஐ.பெரியசாமியின் கேள்வி ஒன்றுக்கு பதில்ளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்,

பிரபல கூகுள் நிறுவனத்தின் கிளை சென்னை அல்லது மதுரையில் நிறுவ சுந்தர் பிச்சையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார்.

ஆனால், சுந்தர்பிச்சை தமிழகம் வந்திருந்தபோது, தமிழக அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ சந்திக்கவில்லையே என்று பெரியசாமி மீண்டும் கேட்டதற்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் சுந்தர்பிச்சை தனிப்பட்ட விவகாரத்திற்காக தமிழகம் வந்ததால் அவரை சந்திக்கவில்லை என்று கூறினார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை என்பவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள  வர்த்தக மையத்தை ரூ.289 கோடி செலவில் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வர்த்தக மையம்  விரிவாக்கம் மூலம் 15,700 சதுரமீட்டர் பரப்பளவு கொண்ட கண்காட்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும்,

சென்னை தரமணியில் ரூ.20 கோடி செலவில் உயிரி தொழில்நுட்ப அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.