தமிழகத்தில் கூகுள் மையம்? அமைச்சர் மணிகண்டன்

சென்னை,

மிழகத்தில் கூகுள் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையை அமெரிக்கா சென்று சந்திக்க இருப்பதாகவும் தமிழக தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

புதிய தொழில் முனைவோருக்கான ஆலோசனை மற்றும் வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மணிகண்டன், பிரபல இணைய தளமான   கூகுள் நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று கூறினார்.

விரைவில் அமெரிக்கா சென்று, சுந்தர் பிச்சையை  சந்திக்க இருப்பதாகவும், அப்போது, தமிழகத்தில் கூகுள் சென்டர் அமைக்க மீண்டும் வலியுறுத்துவோம் என்றும், வானத்தில் 20 கிலோமீட்டர் தூரத்துக்கு இன்டர்நெட் வசதி கிடைக்க கூகுள் பலூனை  பறக்க விட ஏற்பாடு  செய்ய இருப்பதாகவும் கூறினார்.

மேலும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, புதிய தொழில் முனைவோருக்கு உதவி செய்தல், பெண்கள் இன்டெர்னட் பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகவும், விரைவில் இணையதள சேவையை பயன்படுத்துவது குறித்து,  4000 கிராமத்தில் பெண்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தற்போது, ,தமிழகத்தில் 28 ரயில்நிலையங்களில் வைபை வசதி உள்ளது. அதுபோல அனைத்து ரெயில் நிலையங்களிலும் வைகை வசதி ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகவும், விரைவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.