Random image

இந்திய கட்டிடக்கலை பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை டூடுள் வெளியிட்டு கூகுல் கவுரவம்

ந்தியாவின் முன்னணி கட்டிடக்கலை  பொறியாளர் விஸ்வேஸ்வரய்யாவுக்கு டூடுள் வைத்து கவுரப்படுத்தி உள்ளது கூகுள்

புகழ் பெற்ற விஞ்ஞானி விஸ்வேரய்யா. கட்டிடக் கலையில் வல்லுனரான அவர் இந்தியாவின் பல புகழ் பெற்ற கட்டடங்களை வடிவமைத்தவர். மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையையும் அவர்தான் வடிவமைத்தார். அவரது பெயரில் மியூசியம் கல்லூரிகள் என பல்வேறு  அமைப்புகள் உள்ளன.

இன்று அவரது 158வது பிறந்தநாள். இதையொட்டி பிரபல வலைதள நிறுவனமான கூகுள்,  அவரது படத்தை டூடுள் வைத்து கவுரவித்துள்ளது.

கட்டிடக்கலை பொறியாளரான விஸ்வேரய்யா தானியங்கி மதகு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர். இந்தத் தொழில்நுட்பம் முதன்முதலாக புனேயில் கடக்வசல அணைக்கட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரை  கவுரவிக்கும் வகையில் அவரது பிறந்த தினமான செப்டம்பர் 15 இந்திய அரசால் பொறியாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.