தாதாசாகேப் பால்கே பிறந்த நாள்: கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவம்

 ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் தாதாசாகேப் பால்கே . 19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ‘சத்யவான் சாவித்ரி’, ‘இலங்கை தகனம்’, ‘ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மா’ மற்றும் ‘கலிய மார்டான்’ போன்ற 95 திரைப்படங்களையும், 26 குறுந்திரைப்படங்களையும் இயக்கி, இந்திய சினிமாவை உலகளவில் பிரசித்தியடைய செய்தவர்.

இவரது இயர்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே.  நாசிக்கில் 1870-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதி பிறந்தார். 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கி  அவரே இயக்கவும் செய்தார்.

இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். அவருடைய நினைவாக தாதா சாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

இந்நிலையில் அவரை கவுரவிக்கும்  விதமாக தாதாசாகெப் பால்கேவின் 148-வது பிறந்தநாளை பிரபல வலைதளமான  கூகுள் நிறுவனம், டூடுலாக வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.