இந்திய சுதந்திர தினத்தை டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்திய கூகுள்

ந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை பிரபல வலைதள நிறுவனமான கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.

இந்திய நாட்டின் 72வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.  இதை யொட்டி, டில்லியில் உள்ள செங்கோட்டையில், 21 குண்டுகள் முழங்க பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி உரையாற்றுகிறார்.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் முதல்வர்கள் தேசிய ஏற்றுகிறார்கள். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில், தேசிய கொடி ஏற்றுகிறார்.

மேலும், நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கூகுள் என்ற எழுத்துக்கு நடுவில் இந்தியாவின் தேசிய பறவை மயில் அழகாக வடிவமைக்கப்பட்டு, அதற்கு கீழ் இந்திய தேசிய கொடி வரையப்பட்டுள்ளது. மயிலின்  இடதுபுறத்தில் யானையும், வலதுபுறத்தில் இந்தியாவின் தேசிய மிருகமான புலியும் உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: google doodle celebrates indian 72th Independence day, இந்திய சுதந்திர தினத்தை டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்திய கூகுள்
-=-