ந்தியாவை சேர்ந்த பிரபல நடனக் கலைஞர்ல மிருணாளினி சாராபாய் (Mrinalini Sarabhai) பிறந்த நாளை (மே 11, 1918) கூகுள் இணைதளம் டூடுல் வெளியிட்டு கவுரப்படுத்தி உள்ளது.

பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி அளித்துள்ள மிருனாளினி பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளும் பெற்றவர்.

இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டலின்படி  சாந்தி நிகேதனில் கல்வி பயின்ற மிருணாளினி சிறிது காலம் ஐக்கிய அமெரிக்காவில் அமெரிக்கன் நாடகக் கல்விக் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார்.

இந்தியாவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியமும் தகழி குஞ்சு குருப்பு என்பவரிடம் கதகளி நடனமும் பயின்றவர்.

சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் எம்.பி.யுமான அம்மு சுவாமிநாதன் மகளாக கேரளாவில் பிறந்தார் மிருணாளினி. இவரது தந்தை டாக்டர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக் கறிஞராகவும் சென்னை சட்டக் கல்லூரி முதல்வராகவும் பணி யாற்றியவர்.

இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாயின் மனைவி மிருணாளினி. நேதாஜியின் இந்திய தேசிய ராணு வத்தில் பணியாற்றிய லட்சுமி சேகலின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.