‘தபேலா வித்வான்’ லச்சு மகாராஜ் பிறந்த நாளை கவுரவப்படுத்திய கூகுள்

லகப்புகழ் பெற்ற பிரபல  ‘தபேலா வித்வான்’ லச்சு மகாராஜ் பிறந்த நாளை பிரபல வலைதளமான கூகுள் டூடுள் வெளியிட்டு  கவுரவப்படுத்தி உள்ளது.

கூகுள் வலைதளம் தனத முகப்பு பக்கத்தில், லச்சு மகாராஜ் குறித்து சிறப்பு டூடுலை வெளியிட்டு உள்ளது.

1944-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி வாரணாசியில் பிறந்தவர் லச்சு மகராஜ். தபேலா இசையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.  தபேலா வாசிப்பில் ஒன்றான பெனாரஸ் கரோனாவில் சிறந்து விளங்கிய லச்சு மகாராஜ், பல படங்களிலும் நடித்துள்ளார்.

இந்திய அரசு லச்சு மகாராஜை கவுரவப்படுத்தி  பத்மஸ்ரீ பட்டம் அளிக்க முன் வந்த போது அதை ஏற்க மறுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தனக்கு இசை ரசிகர்கள் கொடுக்கும் கவுரவத்தை விட மிகப்பெரிய விருது வேறொன்றுமில்லை, எனவே பத்மஸ்ரீ விருது தேவையில்லை என்று கூறினார். இதையடுத்து அவருக்கு 1957ம் ஆண்டு இயல் இசை நாடகத்துறையின் சிறந்த விருதான  சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டது. அதை பெருமையுடன் ஏற்பாக கூறினார.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தபேலா இசைக்கலைஞர் லச்சு மகாராஜ் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் மறைந்தார்.

இன்று லச்சு மகாராஜின் பிறந்தநாள். அதை கவுரவிக்கும் வகையில்,  கூகுள், சிறப்பு டூடுள் வெளியிட்டு உள்ளது,.