முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

முதலைகளின் நண்பரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் இரவினுக்கு டூடுள் வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது. ஸ்டீவ் இர்வினுக்கு 57 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சிறப்பும் டூடுள் வெளியிடப்பட்டுள்ளது.

Steve

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த ஸ்டீவ் இர்வின் குயின்ஸ்லாந்து நகரில் உள்ள காட்டுயிர் சரணாலயத்தில் உள்ள உயிரினங்களை பேணிக்காத்து வந்தார். காட்டுயிர் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டத்தில் குடும்பத்துடன் காட்டிற்கு சென்று அங்கு வாழும் உயிரினங்களின் பாதுகாப்பு குறித்தும், அவற்றின் முக்கியத்துவம் குறித்த்து ‘க்ரோக்கடைல் ஹண்டர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் விழிப்புணர் ஏற்படுத்தியவர் ஸ்டீவ் இர்வின். இந்த நிகழ்ச்சி மூலம் உலகளவில் ஸ்டீவ் பிரபலமானார்.

எனினும் தனது ஆறு மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு முதலைக்கு ஸ்டீவ் உணவளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலைகள் மீது அதீத ஆர்வமும், பாசமும் வைத்திருந்த ஸ்டீவ் ஆபத்தான கடல்வாழ் உயிரினங்கள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். 2006ம் ஆண்டு கடல்வாழ் உயிரினங்கள் குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கடலினுள் சென்ற ஸ்டீவின் மார்பில் திருக்கை மீன் கொட்டியது. அதனால் ஸ்டீவ் இர்வின் உயிரிழந்தார்.

ஸ்டீவ் இறப்பிற்கு பிறகு அவரது மகனும், மகளும் சுற்றுச்சூழல் ஆர்வர்களாக செயல்பட்டு வருகின்றனர். தனது தந்தையுடன் சிறுவயதில் இருந்தே முதலைகள், பாம்பு, இடும்பு உள்ளிட்ட உயிரினங்களை கையாள பழகிய பிண்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது.

இதனால் ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் ‘ஆஸ்திரேலிய ஜியாகிராஃபிக் சொசைட்டியின் இளம் பாதுகாவலர்’ என்ற உயரிய விருது 2014ம் ஆண்டு பிண்டிக்கு வழங்கப்பட்டது. தனது தந்தை விட்டுச் சென்ற ‘குரோக்கடைல் டைரீஸ்’ -ன் இதர பக்கங்களை தனது சாதனை மூலம் பிண்டி நிரப்பி வருகிறார்.

இந்நிலையில் ஸ்டீவ் இர்வினின் 57-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அவரின் பிறந்த தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். முதலைகள் மீது அதீத ஆர்வம் கொண்ட ஸ்டீவ் இர்வினுக்கு கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. ஸ்டீவ் முதலையை தனது கையில் வைத்திருப்பது போன்ற டூடுள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.