தொழு நோயாளிகளுக்கு சேவை செய்த சமூக சேவகர் பாபா ஆம்தே பிறந்தநாளை டூடுலாக கவுரவித்த கூகுள்

பிரபல சமூக ஆர்வலரும், தொழு நோயாளிகளுக்கு சேவை செய்துவந்த  சமூக சேவகருமான பாபா ஆம்தேவின் 104வது  பிறந்தநாள் இன்று. இதை பிரபல வலைதளமான கூகுள்  டூடுலாக வெளியிட்டு  கவுரவித்து உள்ளது.

இன்று பாபா ஆம்தே 104 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி,  கூகுள் சமூக சேவகர்   மற்றும் ஆர்வலர் முரளிதர் தேவதாசு ஆம்தே-க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது படத்திலான டூடுல் வெளியிட்டு உள்ளது.

பாபா ஆம்தே எனப்படும்  முரளிதர் தேவதாசு ஆம்தே என்பவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் 1914ம் ஆண்டு  டிசம்பர் 26ந் தேதி பிறந்தார். வழக்கறிஞர் பட்டப்படிப்பை முடித்த அவர், சமூக சேவைகளில் அக்கறை காட்டி வந்தார். காந்தியின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கி இருந்த இவர், தனது வாழ்நாளை சமூக சேவைக்காக ஒதுக்கி வாழ்ந்து வந்தார்.

குறிப்பாக தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பதில் மிகுந்த  அக்கறை காட்டினார். இவரது சேவையை பாராட்டி 1971ம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.  1988 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகளின் பரிசு மற்றும் 1999 காந்தி அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டது.

இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி 9ந்தேதி காலமானது. இன்று  அவரது 104வது பிறந்த தினம். அதை கூகுள் கவுரவித்து உள்ளது.

மேலும், பிப்ரவரி 9 ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு வயது முதிர்ச்சியால் காலமானார். இவரின் 104 பிறந்த தினத்தை கூகுள் நிறுவனம் தனது டூடுலில் வைத்து கொண்டாடியுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 104 Birth Anniversary, 104வது பிறந்த நாள், Baba Amte, Google, Google doodle, கூகுள், சமூக சேவகர், டூடுல், தொழு நோயாளிகள், பாபா ஆம்தே
-=-