பாலிவுட் நடிகை மதுபாலாவின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஓவியத்தை டூடுளாக வெளியிட்டு கூகுள் நிறுவனம் பெருமை படுத்தியுள்ளது.

mathupalajpg

இணையதள தேடுபொறியான கூகுள் நிறுவனம் தலைவர்கள் மற்றும் பிறபலங்களின் பிறந்த நாள், வரலாற்று நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் வித்யாசமாக தனது டூடுளை வடிவமைத்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்தியாவின் மர்லின் மன்றோ என்றழைக்கப்படும் மறைந்த பாலிவுட் நடிகை மதுபாலாவின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு அழகான ஓவியத்தின் டூடுளை கூகுள் வடிவமைத்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த முகமது சாஜித் ஒன்ற ஓவியர் இந்த டூடுளை வடிவமைத்துள்ளார்.

1960ம் ஆண்டு வெளிவந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றான முகல் ஏ ஆஸம் என்ற படத்தில் அனார்கலியாக நடித்த மதுபாலாவின் நடனக் காட்சிதான் ஒன்றைய கூகுளில் டூடுளாக வெளியிடப்பட்டுள்ளது. குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் தனது 9 வயதில் திரைத்துறையில் கால்பதித்த மதுபாலா டெல்லியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் மும்தாஜ் ஜெகன் பேகம் தெஹ்லவி.

mathupala

பேபி மும்தாஜ் என்ற பெயரில் திரைத்துறையில் வலம்வந்த மதுபாலா ‘பசந்த்’ என்ற முதல் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு நீல் கமலில் ராஜ்கபூருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு மதுபாலாவின் நடிப்பு உச்சம் தொடட்டது. 1949ம் ஆண்டு மட்டும் 9 திரைப்படங்ங்களில் மதுபாலா நடித்தார். இதில் மிகப்பெரிய வெற்றிப்படமாக வசூலை அள்ளியது ‘மஹால்’ என்ற திரைப்படம்.

இதன் காராணமாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மதுபாலா பாலிவுட்டில் முடிச்சூடா ராணியாக இருந்தார். 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் பெக்கசூர், படால், ஹவுரா பாலம், கலா பாணி, சால்டி கா நாம் காடி உள்ளிட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. எனினும், அவரது நடிக்கும் உருவான முகல் ஏ ஆஸம் என்ற திரைப்படம் நடிப்பின் உச்சத்தில் அவருக்கு புகழை அளித்தந்தது.

காதலை மையமாக கொண்ட சரித்திர படத்தில் மதுபாலா அனார்கலியாக நடித்திருந்தார். நாட்டியம் ஆடும் குடும்பத்தை சேர்ந்த அனார்கலில் பேரரர் அக்பரின் மகன் சலீம் மீது காதல் கொண்டதை தழுவி எடுக்கப்பட்ட கதை தான் முகல் ஏ ஆஸம். இத்திரைப்படத்தில் சலூம் கதாபாத்திரத்தில் திலீப் குமார் நடித்திருந்தார். திரைப்பட பணிகள் நிறைவடைவதற்குள் கதாபாத்திரத்தில் காதலர்களாக இருந்த மதுபாலா மற்றும் திலீப் குமார் நிஜத்திலும் காதலர்களாகினர்.

ஏனினும் திரைப்படம் போன்றே அவர்களின் காதல் திருமணத்தில் முடியாமல் பாதியிலேயே தடைப்பட்டது. முகல் ஏ ஆஸம் வெளியான அதே ஆண்டில் தான் மதுபாலாவின் திருமணம் நடைபெற்றது. புகழ்பெற்ற பாடகர் கிஷோர்குமாரை மதுபாலா கரம்பிடித்தார். இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்தனர்.

வெள்ளித்திரையில் மதுபாலா என்றும் நட்சத்திரம் குறைந்த காலமே ஒளிர்ந்தது. 36 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மதுபாலா தீராத நோயினால் அவதியுற்று ஒருநாள் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரின் கலைச்சேவையை பாராட்டி 2008ம் ஆண்டு இந்திய அணி அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.