‘கை கழுவுவதன் அவசியம்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரை டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்திய கூகுள்…

‘கை கழுவுவதன் அவசியம்’ குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரை கூகுள்  டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.

இக்னேஸ் செமல்வெய்ஸை என்ற மருத்துவர்தான், கைகளை அடிக்கடி கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து மருத்துவ ரீதியாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, உலகுக்கு உன்மையை உணர்த்தியவர்.

தற்போது, கொரோனா தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகளை கழுவ சுகாதார நிறுவனங்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், கைகழுவுவதன் அவசியர்த்தை முதல்முதலில் உணர்த்திய மருத்துவரை கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது.

இக்னேஸ் செமல்வெய்ஸ்…

ஹங்கேரி நாட்டை சேர்ந்தவரான இவர், மருத்துவர் மட்டுமின்றி அறிவியல் ஆராய்ச்சியாளரும் ஆவார். வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர், 1847-ல் இவர் வியன்னா பொது மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவராக நியமிகப்பட்டார்.

அப்போது அவர், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்னதாகக் கட்டாயமாகக் கைகளைக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அந்த காலகட்டத்தில் சைல்ட் பெட் ஃபீவர் (childbed fever) என்றொரு காய்ச்சல் காரணமாக பிறப்பின்போது நிகழும் குழந்தை இறப்பு விகிதம் ஐரோப்பா முழுவதுமே அதிகமாக இருந்தது. அதைத் தவிர்க்க பிரசவத்துக்கு முன்னதாக கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் குறித்து மருத்துவர் இக்னேஸ் செமல்வெய்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. மருத்துவர்கள் பேறுகால சிகிச்சையின்போது கைகளைக் கழுவிவிட்டு பிரசவம் பார்த்தாலோ அறுவைசிகிச்சை மேற்கொண்டாலோ சிசுவுக்கு சைல்ட் பெட் ஃபீவர் தொற்று ஏற்பட்டு குழந்தைகள் இறப்பது வெகுவாகக் குறைந்தது.

இது மருத்துவ உலகில் பெறும் வரவேற்பைப் பெற்றது. அவரது மரணத்துக்கு பிறகு, அவரது  பரிந்துரைகள், ஆராய்ச்சிகள் தொகுக்கப்பட்டு “germ theory of disease” என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டது.

தற்போது, உலகை அச்சுறுத்திவரும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முதல் பரிந்துரையே  கைகளை முறையாகக் அடிக்கடி கழுவ வேண்டும் என்பதே…

இதனை உணர்த்தும் வகையில் இன்றைய கூகுள் டூடுல் வீடியோவில் கை கழுவுதல் விளக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இக்னேஸ் செமல்வெய்ஸையும் நினைவுகூர்வதோடு கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தலையும் வலியுறுத்தி உள்ளது.