கேரளாவுக்கு கூகுள் ரூ. 7 கோடி நிதியுதவி

டில்லி:

வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு ரூ. 7 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 400 பேர் வரை பலியாயினர். 8.69 லட்சம் மக்கள் பாதிப்பிற்குள்ளாயினர். மாநிலம் முழுவதும் 2,787 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவுக்கு தமிழகம் ரூ. 10 கோடி நிதியுதவியும், தனிப்பட்ட நிறுவனங்கள் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றன. மத்திய அரசு ரூ.600 கோடி அளித்துள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் ரூ.7 கோடி நிதி உதவியை அளிக்க உள்ளது. இது குறித்து இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவுக்கான கூகுள் நிறுவன துணை தலைவர் ராஜன் ஆனந்தன் கூறுகையில்,‘ கேரள வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்காக 7 கோடி ரூபாய் நிதி உதவி அளிகப்படும்.கூகுள் கிரிசிஸ் ரெஸ்பான்பான்ஸ் குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.