கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 34,625 கோடி அபராதம்….ஐரோப்பியா அதிரடி

லண்டன்:

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் ரூ.34,265 கோடி அபராதம் விதித்துள்ளது.

 

கூகுள் நிறுவனம் தனது ஆன்த்ராய்டு செல்போன் இயங்குதளத்துக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்திய குற்றத்திற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரேஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியனின் வர்த்தகப் போட்டிகளுக்கான ஆணையர் மார்கரித் வெஸ்டேஜர் நிருபர்களிடம் இதை தெரிவித்தார்.

இணையதளத்தில் பொருள்களை வாங்க வாடிக்கையாளர்கள் கூகுள் மூலம் தேடும்போது தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும். பிற நிறுவனங்களை மறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டில் 2017ம் ஆண்டில் ஏற்கெனவே ரூ.19 ஆயிரம் கோடி அபாரதம் விதிக்கப்பட்டது.

தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு கூடுதல் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கூகுள் சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.