டில்லி:

ந்தியாவின் முதல்பெண் பத்திரிகை புகைபட கலைஞரான ஹோமாய் வயரவாலா வின் 104-வது பிறந்த தினத்தை கூகுள் நிறவனம் தன்னுடைய டூடுலில் கவுரவித்துள்ளது.

இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்படக் கலைஞர் ஹோமாய் வயரவாலா. இவர், குஜராத் மாநிலத்தில் நவ்சாரி என்ற இடத்தில் 1913ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி பிறந்தார்.

ஹோமாய் வயரவாலா

இவரது  குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அங்கு, ஜேஜே ஸ்கூல் ஆப் ஆர்ட்டில் தன்னுடைய கணவரான மானக்ஷா வயரவாலாவை சந்தித்தார். இவரும் புகைப்பட கலைஞர். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தினால் புகழ் பெற்ற பத்திரிகை புகைபட கலைஞரானார்.

இந்தியா- பாகிஸ்தான்., பிரிவினையின் போது முகம்முதுஅலி ஜின்னாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர் இவர். தவிர திபெத்தில் இருந்து தலாய் லாமா இந்தியாவிற்கு வரும் போது அவரை சந்தித்து புகைப்படம் எடுத்தவர்.

இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி தனது 98-வது வயதில் காலமானார். இன்று டிச.,9 அவரது 104-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவரை கவுரப்படுத்தி இருக்கிறது.