உணவுகள் எல்லாம் இனி கூகிள் தேடுதளம், கூகுள் மேப்-ல் வாங்கலாம்

பிரபல இணையத்தளமான கூகிள் நிறுவனம் தமக்குத் தேவையான உணவு வகைகளை கூகிளில் தேடி அதன்மூலமே உணவுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றும், இந்தச் சேவையை கூகிள் தேடுதளம் மட்டுமல்லாமல் கூகிள் மேப் தேடலிலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது

People sharing pizza

சமீபத்தில் கூகிள் தேடுதளம் தனது தேடுபொறியை தனது எல்லா சேவைகளையும் ஒன்றிணைத்து மேம்படுத்தியுள்ளது, அதனடிப்படையில் இனி நீங்கள் ஏதேனும் உணவு வகைகளை தேடினால் அதில் order online என்ற பட்டன் வரும், அதில் கிளிக் செய்து சம்பந்தப்பட்ட கூகிள் பே வழியாக பணம் செலுத்தினால் பொருள் நேரடியாக உங்களுக்கு வந்து சேரும். இதுமட்டுமல்ல கூகுள் அசிஸ்ச்டெண்ட் செயலியிடம் நீங்கள் வாங்கிய கடைசி உணவினை சொல்லி எப்போது வேண்டுமென்று சொல்லிவிட்டால் கூகிள் அசிஸ்டெண்டே உங்களுக்கான ஆர்டரை செய்து பணமும் கட்டிவிடும்

இதற்கால ப உணவுச் சேவை நிறுவனங்கள் கூகிள் பேசி வருகிறது, இது விரைவில் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு பின் படிப்படியாக எல்லா நாடுகளிலும் விரிவாக்கம் செய்யப்படும்.

– செல்வமுரளி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: food delivery services, Google assistant
-=-