கூகிள் நிறுவனத்தின் எதிர்கால இயங்குதளம் Fuchsia

கூகிள் நிறுவனத்தின்  எதிர்கால இயங்குதளம் Fuchsia

தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகி பெருகி வர இயங்குதளங்களும் அதேற்கேற்றார்ப்போல் தங்களை மேம்படுத்தி வருகின்றன. கிளவுட் எனும் மேகக்கணிமை வந்தபின்னர்  பல துறைகள் மேகக் கணிமையை அடிப்படையாக கொண்டு உருவாகின, இப்போதைய உலகம்  IoT   எனப்படும் பொருட்களின் இணையத்தினை சார்ந்து செல்ல உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு IoT பெரும் மாற்றத்தினை உருவாக்கும்.

இப்போதுள்ள உலகையே செல்பேசி இயங்கு சந்தையில் பெரும் சந்தையை கொண்டிருக்கும் ஆன்டிராய்டு செல்பேசிகளுக்கு சரியாக இயங்கலாம், ஆனால்  IoT   , செயற்கை நுண்ணறிவு (Artificial Inteligent) , ஆகுமெண்ட் ரியாலிட்டி(Augmented reality) , விர்ச்சுவல் ரியாலிட்டி(Virtual Reality) மற்றும் குரல் மூலம் இயங்கும் கருவிகள் (Like Google Home , Amazon Alexa), தானியங்கு வாகனங்கள்  இன்ன பிற நவீன நுட்பங்களுக்கு ஏற்ப இன்னமுமம் மேம்படுத்தப்படவேண்டுமென்பதால் கூகிள் நிறுவனம் தனது  அடுத்த நவீன இயங்குதளத்தினை  Fuchsia என்ற திட்ட பெயரில் உருவாக்கிவருகிறது.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இதுவரை உள்ள இயங்குதளங்களின் இயலாமையை கூகிளின்  Fuchsia பூர்த்தி செய்யும்

சமீபத்தின் டுவிட்டரில் கூகிள் நிரலாளர் ஒருவரின் பதிவில் கூகிள்  Fuchsia  திட்டத்திற்கு பணியாற்ற நோடு.ஜேஎஸ் தெரிந்தவர்கள் வேலைக்கு தேவை என்று தெரிவித்திருந்தார் , இதனடிப்படையில் பார்க்கும்போது கிராஸ்பிளாட்பார்ம்களுக்கு அதாவது எல்லா இயங்குதளங்களிலும் இயங்கும்வகையில் இருக்கும்

கூகிள்தான் இப்படி செய்கிறதே மற்ற நிறுவனங்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவேண்டுமா?

இதோ
Apple’s AirPower
Microsoft’s Andromeda device.

-செல்வமுரளி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Fuchsia OS, Google
-=-