சீனாவுக்கு ஆதரவாக ‘Remove China Apps’ இந்திய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்…

சீன வர்த்தகத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வந்த  இந்திய செயலியான  ‘Remove China Apps’  செயலியை கூகுள் பிளே ஸ்டோரில்  கூகுள் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய இணையவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

உலக வர்த்தக சந்தைக்கு போட்டியாக களமிறங்கியுள்ள சீனா, எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. அதுபோல இணையதளத்திலும் ஏராளமான செயலிகள் (Apps) மூலம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வருகிறது.

கொரோனா வைரஸ் உருவாக காரணமாக இருந்த சீனா, அதுகுறித்து சரியான தகவல்கள் வெளியாத நிலையில்,  இந்தியா உலக நாடுகளும், மக்களும் சீனா மீது கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில்,  கடந்த சில நாட்களாக இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில்  சீனா வாலாட்டி வரும் நிகழ்வுகளும் இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

இதன் காரணமாக, சீனப் பொருள்களை வாங்க மாட்டோம் என சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இது வைரலாகி பலர் சீனப் பொருட்களை தவிர்க்க தொடங்கி உள்ளனர். இந்திய அரசின் ராணுவ கேன்டீனிலும், இந்திய பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுபோன்ற பரபரப்பான சூழலில், ராஜஸ்தான் மாநிலம்,  ஜெய்ப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ரிமூவ் சீனா ஆப்ஸ் (Remove China Apps) என்ற செயலியை கடந்த மே மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அதுபோல டிக்டாக் செயலிக்கு எதிராக மித்ரன் (Mitron) என்ற செயிலியும் இந்தியரால் களமிறக்கப்பட்டது.

இந்திய செயலிகளுக்கு நமது  மக்களிடையே பெரும் வரவேற்பு கிட்டியது. ஆயிரக்கணக்கானோர் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்தத் தொடங்கினர். சீனச் செயலிகளான டிக்டாக் உள்பட பல செயலிகள் அடையாளம் காணப்பட்டு, அதை நீக்கி வந்தனர்.

தற்போதைய நிலையில்,  சுமார் 50லட்சத்தக்கும் அதிகமானோர், சீன செயலிகளை நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இணையதளம் மூலம் இந்தியர்களிடையே வர்த்தகம் செய்த வந்த சீனாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த சீன அரசு தரப்பில் கூகுள் இணையதளத்திடம் முறையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ரிமூவ் சீனா ஆப்ஸ் (Remove China Apps), மித்ரன் (Mitron app) ஆபக்ளை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.

இந்த இரு செயலிகளையும் நீக்கியதற்கான காரணம் குறித்து கூகுள் நிறுவனத் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

‘கூகுள் நிறுவனத்தின் இந்த ஒருதரப்பான முடிவு  சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்தை உருவாக்கி உள்ளது. சீனாவுக்கு ஆதரவாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.