ரெயில் நிலையத்தில் இலவச வை-ஃபை மேலும் 10 ரெயில் நிலையங்களில்

ரெயில்டெல் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து சென்ற ஆண்டு மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. மேலும் தற்போது 10 ரெயில் நிலையங்களில் இந்த சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. புனே, போபால், ராஞ்சி, ராய்ப்பூர், புவனேஸ்வர்,விஜயவாடா, காச்சிகுடா, எர்ணாகுளம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவை கொண்டு வரப்படுகிறது.

RailTel-Google-WiFi-proj

100 ரெயில் நிலையங்களில் ஆண்டு இறுதிக்குள் இந்த வசதியை கொண்டு வரப்பட உள்ளது. மும்பாயில் தற்போது ஒரு லட்சம் நபர்கள் இந்த இலவச வை-ஃபை இண்டர்நெட் சேவையை பயன்படுத்துகிறார்கள். இந்த திட்டம் 400 ரயில் நிலைகளில் கொண்டு செல்ல அரசாங்கம் திட்டம் அமைத்துள்ளது.

ரயில்டேளின் 45000 கிலோமீட்டர் அதிவேக ஒப்டிக் கேபிள் நாடு முழுவதும் ரயில் பாதையில் அமைத்துள்ளது.கூகுள் தொழில்நுட்பத்தைப் ரயில்வே பயணிகள் பயன்படுத்தும் விததில் இந்த சேவை இருக்கும் என ரயில்வே உயர் அதிகரிகள் கூறினார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Google, Indian Railways, Railwire, Railwire-Google, ரெயில் நிலையத்தில் இலவச வை-ஃபை மேலும் 10 ரெயில் நிலையங்களில்
-=-