கூகுளுக்கு 20 வயது : சிறப்பு டூடுல் வெளியீடு

நியூயார்க்

பிரபல தேடு தளமான கூகுள் இன்று தனது 20 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதால் புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 1998 ஆம் வருடம் கலிபோர்னியா மநிலத்தில் படித்த இரு மாணவர்களால் கூகுள் தேடு தளம் தொடங்கப்பட்டது.   இன்று பெரும்பாலானோர் உபயோகிக்கும் ஒரே தேடு தளமாக கூகுள் உயர்ந்துள்ளது.   இந்த நிறுவனத்தின்  பல கிளை நிறுவனங்களும் ஒரே குடையின் கீழ் இயங்கி வருகின்றன.

கூகுளின் 20 ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு அந்நிறுவனம் ஒரு புதிய டூடுலை வெளியிட்டுள்ளது.   உபயோகிப்பாளர்களின் கவனத்தை பல விதங்களில் கூகுள் ஈர்த்து வரும் நிலையில் இந்த டூடுல் பலரைக் கவர்ந்துள்ளது.