வாஷிங்டன்:
ர்ச்சைக்குரிய 30 செயலிகளை  நீக்கியுள்ளது கூகுள் பிளே ஸ்டோர். இந்த செயலிகள் பயனர்களை தேவையில்லாத விளம்பரங்களில் திசை திருப்புவதாக தெரிகிறது. ஆனால் இந்த செயலிகள் ஏற்கனவே 20 மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரபலமான செயலிகளில் ஆபத்தான மால்வேர்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் நீங்கள் புகைபடத்தை அழகாக்க பயன்படுத்தும் பியூட்டி ஆப்பும் அடங்கும்.
புதியதாக பிளே ஸ்ட்டோரில் சென்று பதிவிறக்கம் செய்பவர்களுக்கு இது கிடக்காது.  ஆனால் இந்த சர்ச்சைக்குரிய செயலிகளை ஏற்கனவே பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் பயனர்கள் உடனடியாக இதனை நீக்குவது நல்லது, இதனை மேலும் வைத்திருந்தால் செக்கியூரிட்டி பிரச்சனை வர அதிக வாய்ப்புள்ளது.
சில செயலிகள் தேவை இல்லாத விளம்பரங்களை கொண்டு பயனர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது மட்டுமில்லாமல் பல்வேறு வலைத்தளத்திற்க்கு லிங்கை கிளிக் செய்யாமலேயே கொண்டு சென்று விடுகிறது. சில பயனர்களுக்கு இதுபோன்ற செயலிகளை பதிவிறக்கம் செத்துவிட்டால் அதனை திருப்பவும் நீக்க முடிவதில்லை.
யுரிகோ கேமரா, சொலு கேமரா, லைட் பியூட்டி கேமரா, பியூட்டி கொலேஜ் லைட், பியூட்டி அண்ட் பில்டர்ஸ் கேமரா,  போட்டோ கொலேஜ் அண்ட் பியூட்டி கேமரா, கேடி பியூட்டி கேமரா, பாண்ட் செல்ஃபி பீயூட்டி கேமரா, கார்டூன் போட்டோ எடிடர் அண்ட் செல்ஃபி பியூட்டி கேமரா, பென்ம்பு செல்ஃபி பியூட்டி கேமரா,  பினுட் செல்ஃபி பியூட்டி அண்ட் போட்டோ எடிடர், மூட் போட்டொ எடிட்டர் அண்ட் செல்ஃபி பியூட்டி கேமரா, ரோஸ் போட்டோ எடிட்டர் அண்ட் செல்ஃபி பியூட்டி கேமரா, செல்ஃபி பியூட்டி கேமரா அண்ட் போட்டோ எடிட்டர், ஃபாக் செல்ஃபி பியூட்டி கேமரா அண்ட் போட்டோ எடிடர், ஃபர்ஸ்ட் செல்ஃபி பியூட்டி கேமரா அண்ட் போட்டோ எடிட்டர்,  வனு செல்ஃபி பியூட்டி கேமரா, சன் பிரோ பியூட்டி கேமரா, ஃபன்னி ஸ்வீட் பியூட்டி கேமரா, லிட்டில் பீ பியூட்டி கேமரா, பியூட்டி கேமரா அண்ட் போட்டோ எடிட்டர் ப்ரோ, க்ராஸ் பியூட்டி கேமரா, ஏல் பியூட்டி கேமரா, ஃப்ளவர் பியூட்டி கேமிரா, பெஸ்ட் செல்ஃபி பியூட்டி கேமரா, ஆரஞ்ச் கேமரா, சன்னி பியூட்டி கேமரா, ப்ரோ செல்ஃபி பியூட்டி கேமரா, செல்ஃபி பியூட்டி கேமரா ப்ரோ, எலிகண்ட் பியூட்டி கேம் – 2019.
மேற்கூறிய செயலிகளை எல்லாம் தற்போது 20 மில்லியனுக்கும் மேலானவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொண்டு உள்ளனர். கூகுள் நிறுவனம் இவ்வாறான மோசடி செயலிகள் கண்டறியப்பட்ட உடன் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்கின்றன.
மேலும் கூகுள் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் என்றும் எங்கள் கொள்கைகளை மீறும் நடத்தையை கண்டால் நாங்கள் கட்டாயம்  நடவடிக்கை எடுப்போம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.