படங்களை திருடுவதாக கருதும் 29 செயலிகளை நீக்கிய கூகிள்

செல்போன் செயலிகளில் அதிகமான  செயலிகளை வைத்துள்ள கூகிள் நிறுவனம் சமீபத்தில் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து 29 செயலிகளை நீக்கியுள்ளது

நமது முகத்தைப் பல்வேறு விதமாக மாற்றுவதற்கு பல செயலிகள் உள்ளன. அதில் நமது முகத்திற்கு அழகு சேர்ப்பது, உதட்டிற்கு சாயம் பூசுவது, தலைக்கு கிரீடம் வைப்பது என்று  பல்வேறு வசதிகளை சேர்க்கும் செயலிகள் செல்போன் பயனாளர்களை அதிகம் கவர்கிறது.  . இதனால் பல நிறுவனங்கள் புதிய புதிய செயலிகளை உருவாக்கி வெளியிடத் தொடங்கின. குறிப்பாகப் பெண்கள் மையப்படுத்தி புதிய புதிய  செயலிகளை  வெ ளியிடுகின்றனர்

சில போலியான செயலிகள் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை திருடி விற்பதாகபுகார் எழுந்துள்ள நிலையில் கூகிள் நிறுவனம் முதல்கட்டமாக 29 செயலியை நீக்கியுள்ளது

இதுபோன்ற செயலிகளை இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்ற தகவலையும் நாம் கவனிக்கவேண்டும்.

கூகிள் நீக்கியுள்ள 29 செயலிகளின் பெயர்கள் கீழே
இந்த செயலிகள் உங்களிடம் இருந்தால் நீக்கிவிடலாம்

Pro Camera Beauty
Cartoon Effect
Art Effect
Photo Editor
Wallpapers HD
Magic Art Filter Photo Editor
Fill Art Photo Editor
ArtFlipPhotoEditing
Art Filter
Cartoon Art Photo
Artistic effect Filter
Art Editor
Beauty Camera
Selfie Camera Pro
Horizon Beauty Camera
Super Camera
Art Effects for Photo
Awesome Cartoon Art
Art Filter Photo
Art Filter Photo Effcts
Prizma Photo Effect
Cartoon Art Photo Filter
Art Filter Photo Editor
Pixture
 Art Effect
Photo Art Effect
Cartoon Photo Filter
Cartoon Art Photo

-செல்வமுரளி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 29 photo-stealing apps, Google removed, Play Store
-=-