வைரஸ் பரவலுக்கு வடகொரியா காரணம்: கூகுள் பாதுகாப்பு ஆலோசகர் கருத்து  

லண்டன்:

உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களை மிரட்டி வரும், ‘வான்னாக்ரை’ வைரஸ் பரவலுக்கு வட கொரியாவின் இணைய திருடர்கள் தான் காரணம் என்பதை இந்தியாவை சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் பாதுகாப்பு ஆலோகர் நீல் மேத்தா தெரிவித்துள்ளார்.

வட கொரியாவை சேர்ந்த, ‘லாசரஸ் குருப்’ என்ற இணைய திருடர்கள், 2014ம் வருடம் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இணைய தளத்தையும்,  கடந்த வருடம் வங்க தேச மத்திய வங்கி இணைய தளத்தையும் சீரழித்தனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம்தான், தற்போது, ‘வான்னாக்கரை’ வைரஸ் தொழில்நுட்பத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீல் மேத்தா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தற்போது நீல் மேத்தா கருத்தை உலகம் முழுவதும் உள்ள கம்ப்யூட்டர் நிபுணர்கள் கவனத்தில் கொண்டு, ஆய்வு செய்து வருகின்றனர்.