ஓட்டுநரில்லாமல் நேர்த்தியாக ஓடும் கூகுள் தானியங்கி கார்கள் மனித ஓட்டுநர்கள் செய்யும் தவறுகளால் ஆங்காங்கே விபத்துக்குள்ளாகி வருகிறது.

gglcar

அமெரிக்காவில் கூகுள் தானியங்கி கார்கள் பிரபலமடைந்து வருகின்றன. புகழ்பெற்ற ஹெர்பி படத்தில் வரும் கார் போல தானாக நேர்த்தியாக ஓடும் இந்த கார்கள் பெரும்பாலும் எந்த விபத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் சாலையில் உடன் பயணிக்கும் பனித டிரைவர்கள்தான் தங்களது தவறுகளால் இந்தக் காரை அவ்வொப்பொழுது விபத்துக்குள்ளாக்குகிறார்களாம். கூகுள் காருக்கு ஏற்பட்ட விபத்துகளில் 94% இப்படி ஏற்பட்டவைதானாம்.
சமீபத்தில் அமெரிக்காவில் மவுண்டன் வியூ என்ற பகுதியில் ஒரு வேன் டிரைவர் செய்த தவறால் கூகுள் காரின் ஒரு பக்கம் முழுக்க சேதமடைந்து விட்டது. நல்லவேளையாக இரு வாகனங்களில் இருந்தவர்களுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. சாலை விதிகள், மேப் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் பார்த்துப் பார்த்து பாதுகாப்பாக வடிவமைத்தாலும். சாலையில் திடீரென தவறு செய்து விபத்துகளை ஏற்படுத்தும் மனித ஓட்டுநர்களிடமிருந்து தனது காரையும் அதில் பயணம் செய்பவர்களையும் எப்படி காப்பாற்றுவது என்பது தனக்கு பெரிய சவாலாக இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.