டில்லி

கூகுள் தேடுதளத்தில் உலகின் சிறந்த க்ழிவறை காகிதம் எது என கேட்டால் பாகிஸ்தான் கொடி என பதில் வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.    நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.   இதற்கு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

உலகெங்கும் உள்ள பல தலைவர்கள் இந்த தாக்குதலை முன்னிட்டு பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   அத்துடன் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ் ஈ முகமது இயக்க தலைவர் மசூத் அசாருக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் எனவும் அந்த தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கூகுள் தேடு தளத்தில் உலகின் சிறந்த கழிவறை காகிதம் எது (WORLD’S BEST TOILET  PAPER) என கேட்டால்  பாகிஸ்தான் கொடி என பதில் வருகிறது.    இது டிவிட்டரில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது.   இந்த தகவல் #பெஸ்ட் டாய்லட்பேப்பர்இன்திஓர்ல்ட் என்னும் ஹேஷ்டாக்குடன் பரவப்படுகிறது.

https://twitter.com/GauriJo43735050/status/1096967657516032002?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1096967657516032002&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Findia%2Fstory%2Fbest-toilet-paper-in-world-google-pakistan-flag-1458286-2019-02-17