லிஃபோர்னியா

ரும் ஜூன் மாதம் முதல் இணைய வழியில் பொருட்கள் வாங்கும் செயலிகளுக்குக் கூகுள் தடை விதிக்க உள்ளது.

தற்போது அனைத்துப் பொருட்களும் இணையம் மூலம் வாங்குவது மிகவும் அதிகரித்துள்ளது.    இதில் மளிகை, மின்னணு, கணினி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அடங்கும்.   இவற்றை வாங்கப் பல நிறுவனங்கள் செயலிகளை உருவாக்கி உள்ளது.  அவற்றில் நுழைந்து வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குகின்றனர்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் இணைய வழியில் பொருட்களை வாங்கும் செயலிகளுக்குத் தடை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.  வரும் ஜூன் மாதம் முதல் இந்த தடை அமலுக்கு வருவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.  இதையொட்டி கூகுள் நிறுவனம் ஐ ஓ எஸ் மற்றும் ஆண்டிராய்ட் ஆகிய இரு தளங்களிலும் உள்ள வர்த்தக செயலிகளை ஜூன் மாதம் முதல் நீக்க உள்ளது.

இனி தங்கள் இணையத்தில் தேவையான பொருட்களை வாங்க புதிய அம்சங்கள் வழங்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.   அத்துடன் ஷாப்பிங் டேப் என்னும் புதிய ஆப்ஷன் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த கூகுள் அதன் மூலம் தங்கள் மின் அஞ்சலைப் பயன்படுத்தி செயலியில் பொருட்களை வாங்குவது போல் வாங்கலாம் எனவும் அறிவித்துள்ளது.