டில்லி:

1.3 லட்சம் பேருக்கு உதவித் தொகையுடன் கூடிய தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ப்ளூரல் சைட் மறறும் உதசிட்டி கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ளூரல் சைட்டில் பயிற்சி பெறும் ஒரு லட்சம் பேருக்கும், உதசிட்டியில் பயிலும் 30 ஆயிரம் பேருக்கும் இந்த உதவித் தொகையை கூகுல் வழங்குகிறது.

மொபைல் மற்றும் இணையதள மேம்பாட்டில் மாணவர்களுக்கு நவீன பாடத்திட்டம் மூலம் எந்திர பயிற்சி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல அமசங்களில் பயிற்சி அளிக்கபடவுள்ளது. இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கும் இலக்கின் ஒரு பகுதியாகும். 2015ம் ஆண்டு கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை 20 லட்சம் பேருக்கு பயற்சி அளிக்கும் திட்டத்தை 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

‘‘கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் மூலம் 10 லட்சம் மாணவர்கள் மற்றும் மேம்பாட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது வரை 2.10 லட்சம் பேர் இந்த பயிற்சியை முடித்துள்ளனர். இந்த ஆண்டு 1.17 லட்சம் பேர் பயிற்சியை முடிக்கவுள்ளனர்.

ஆந்த்ராய்டு டெவலப்பர், மொபைல் வெப் ஸ்பெஷலிஸ்ட், கிளவுட் ஆர்கிடெக்ட், டேட்டா இன்ஜினியர் ஆகிய 4 முக்கிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது’’ என்று கூகுள் நிறுவனத்தை இந்தியாவில் வழிநடத்தும் வில்லியம் ஃப்ளோரன்ஸ் தெரிவித்துள்ளார்.