இணைய பயங்கரவாதிகளுக்கு எதிராக களமிறங்கும் கூகுள்

--

டில்லி:

யங்கரவாத கருத்துகளை இணையத்தின் மூலம் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க கூகுள் நிறுவனங்கள் இணைந்து முடிவு செய்துள்ளன.

பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், மற்றும் பல சமூக விரோதிகள், தங்களுக்குள் சங்கேத குறியீடுகளுடன் கூடிய தகவல்களை பகிர்வதற்கும், பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் வதந்திகளை பரப்பிடவும், தீவிரவாத அமைப்புகளைப் புகழவும், இணையத்தைப்  பயன்படுத்தி வருகின்றனர்.

கூகுள் வெப் சைட்டுகள் மூலமாக பல பயங்கரவாத கருத்துகளை தீவிரவாதிகள் பரப்பி வருகின்றனர். லண்டன் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவரில் ஒருவர், யூடியூப் தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு ஆதரவான பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

கூகுள் நிறுவனமும், அதன் துணை நிறுவமான யூடியூப் நிறுவனமும் பயங்கரவாத கருத்துகளை பரப்பும் வீடியோக்களையும், அதற்கு ஆதரவான விளம்பரங்களையும் கண்டறிந்து களையெடுக்க முடிவு செய்துள்ளன. இது போன்ற பயங்கரவாத கருத்துக்கள், மற்று, அவதூறு செய்திகளை முற்றிலுமாக நீக்கவும், இவற்றை பதிபவர்களை  பிளாக் செய்யவும் கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.