சட்டவிரோத சினிமா டவுன்லோடு நிறுவனங்களை முடக்க பிரிட்டன் முடிவு

--

லண்டன்:

இன்டர்நெட்டில் இருந்து சட்டவிரோதமாக சினிமாவை டவுன்லோடு செய்ய பயன்படும் ‘‘டோரன்ட்’’ வெப்சைட்களை விரைவில் முடக்க கூகுல், யாகூ, பிங் ஆகிய இணைய தேடுதல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இணையதளத்தில் இருந்து சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் திரைப்படங்கள், பாடல்கள், வீடியோ, ஆடியோ உள்ளிட்ட விஷயங்களை டவுன்லோடு செய்ய ‘‘டோரன்ட்’’ இணைய தளங்கள் செயல்படுகிறது. இவர்களது சாப்ட்வேரை ஆன்லைனயில் டவுன் லோடு செய்து கம்ப்யூட்டரில் பொறுத்திக் கொண்டால் இணைய தள டவுன்லோடுகள் எளிதாக இருக்கும்.

இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக பொழுதுபோக்கு நிறுவனங்கள் புகார் செய்து வந்தன. இத்தகைய டவுன்லோடு சாப்ட்வேர் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்று உலகளவில் கோரிக்கைகள் எழுந்தது. இதற்கு யுகே தற்போது தூபம் போட்டுள்ளது.

கூகுல், யாகூ, பிங் போன்ற தேடுதல் நிறுவனங்களின் அதிகாரிகள், பொழுதுபோக்கு துறையினர் கலந்துகொண்ட கூட்டம் லண்டனில் நடந்தது. ஆங்கிலேயர் அரசின் அறிவுசார் சொத்து அலுவலகம் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கூகுல், யாகூ, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் போன்ற தேடுதல் நிறுவனங்கள் ‘‘டோரன்ட்’’ டவுன்லோடு இணையதளங்களை முடக்கும் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடவுள்ளன.

முன்னதாக இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த மசோதாவை வரும் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேடுதல் நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதால் இந்த திட்டத்தை விரைந்து முழு அளவில் செயல்படுத்த முடியும் என்று அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த முடிவு ஐக்கிய பேரரசுக்கு (யுகே) மட்டும் தான் தற்போது முடிவு செய்யப்படுகிறது. இது வெற்றி பெற்றால் இதர நாடுகளும் இந்த முடிவை எடுக்கும்.