சென்னை:

ல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 12 பேரை கைது செய்துள்ள சென்னை காவல்துறையினர் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைந்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  கொலை முயற்சி வழக்கு உள்பட குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய 12 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி,   பள்ளிக்கரணை ஏரிக்கரை பவானியம்மன் கோயில் தெருவை சேர்ந்த யுவராஜ் (எ) அனிருத் (வயது 27) மற்றும் அரிபிரசாத் (எ) அரி (வயது 26), பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவை சேர்ந்த கலையரசன் (வயது 24), பள்ளிக்கரணை பாரதியார் தெருவை சேர்ந்த தனசேகர் (வயது 24).

ஏழுகிணறு பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் குர்ஜார் பகுதியை சேர்ந்த ஷியாம் குர்ஜார் (வயது 23), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியை சேர்ந்த மகேஷ் சவுத்ரி (வயது 24).

கஞ்சா மற்றும் அடிதடி வழக்கில் சம்பந்தப்பட்ட கிருஷ்ணமூர்த்தி நகர் சுப்ரமணி தெருவை சேர்ந்த லியோ ரீகன் (வயது26), ஓட்டேரி மேட்டுப்பாளையம் கர்நாடிக் மில் லேன் பகுதியை சேர்ந்த மதன்குமார் (வயது 29).

வழிப்பறி வழக்கில் தொடர்புடைய நெற்குன்றம் சிடிஎன் நகர் 8வது தெருவை சேர்ந்த தனஞ்செழியன் (வயது 36), மதுரவாயல், கந்தசாமிநகர் 3வது தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 28).

கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய கொருக்குப்பேட்டை ஜெ.ஜ.நகர் 2வது தெருவை சேர்ந்த ராபர்ட் (வயது 25), வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய பம்மல் குழந்தைகள் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 23) ஆகிய 12 பேரும் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.

” for 12 rowdies in Chennai! chennai Police Action