மோரி, மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேசத்தில் அவசரப் போலீசாரை மிரட்டி அவர்கள் வாகனத்தில் ஒரு பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள பமோரி என்னும் கிராமத்தில் இருந்து அவசரப் போலீசுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.   மிகவும் அவசரமாக வருமாறு கோரிக்கை விடுத்ததை நம்பி வாகனத்தில் அவசர போலீசார் சென்றுள்ளனர்.    அந்த கும்பலில் ஒருவர் மயங்கியது போல விழுந்திருந்தார்.   காவல்துறையினர் நெருங்கியதும் மறைந்து இருந்த மற்றவர்கள் வெளியே வந்தனர்.

துப்பாக்கி முனையில் காவல்துறையினரை மிரட்டி அவர்கள் உடையை பறித்துக் கொண்டு அவசர போலீஸ் வாகனத்தில் சென்றனர்.   அதே கிராமத்தில் உள்ள ராஜ்குமார் படேல் என்பவரின் வீட்டுக்குச் சென்று தங்களை போலிசார் எனக் கூறி அவரது மகள் நிரஜலா (வயது 20) என்னும் கல்லூரி மாணவியை கடத்திச் சென்றுள்ளனர்.

பிறகு தாங்கள் அடைத்து வைத்திருந்த அவசர போலீசாரிடம் அவர்களுடைய வாகனங்களையும் உடைகளையும் அளித்து விட்டு தங்கள் வாகனத்தில் நிரஜலாவுடன் தப்பிச் சென்று விட்டனர்.    இருளாக இருந்ததால் அந்தக் கும்பலைப் பற்றி அவசரப் போலீசாருக்கு ஒன்றும் தெரியவில்லை என சொல்லப்படுகிறது.

தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு பெண்ணைக் கடத்தியவர்களை காவல்துறை தேடி வருகிறது.