பாட்னா: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விடுத்த அழைப்பு நிராகரித்துள்ளார் இந்தியாவின் இளம் விஞ்ஞானி கோபால்ஜி. இவருக்கு வயது 19.

தற்போது பி.டெக். படித்துவரும் கோபால்ஜி இளம்வயது முதலே புதிய புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்டி வருபவர்.
அவர் பத்தாம் வகுப்பு படித்தபோதே, வாழை இலை மற்றும் காகிதத்தில் இருந்து பயோசெல்களை கண்டுபிடித்ததற்காக, ‘இன்ஸ்பயர்’ விருதைப் பெற்றார்.

கிழக்காசிய நாடான தைவானின் தலைநகர் தைபேவில் நடந்த கண்காட்சியில், கோபால்ஜியின் கண்டுபிடிப்பைப் பார்த்து, பல நாடுகளின் நிறுவனங்கள் அவரை அழைத்தன.

இதற்கிடையே, கடந்த 2017ம் ஆண்டில் பிரதமர் நதேந்திர மோடி, கோபால்ஜியை அழைத்துப் பாராட்டினார். இந்த சந்திப்புக்கு பின், ஆமதாபாதில் உள்ள நேஷனல் இன்னொவேஷன் பவுன்டேஷனுக்கு அனுப்பப்பட்ட கோபால்ஜி, அங்கு 34 அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியதுடன், இரண்டுக்கு காப்புரிமை பெற்றார்.

இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள உலகப் புகழ்பெற்ற நிறுவனமான நாஸாவிலிருந்து இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால், “எதையும் என் நாட்டிற்காகவே செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்” கோபால்ஜி.