இணையத்தில் வைரலாகும் கோபி பிரசன்னாவின் உதிரி பூக்கள்…!

உடல் நலக் குறைவால் ஒரு வார காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் மகேந்திரன் தனது இல்லத்தில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 79.முள்ளும் மலரும், உதிரி பூக்கள், ஜானி போன்ற உணர்வுப் பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடத்தவர் நடிகர் மகேந்திரன்.

மகேந்திரனின் உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். ஊரில் இல்லாதவர்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்கள்.

இந்நிலையில், ‘ஆரண்ய காண்டம்’, ‘கத்தி’, ‘மெர்சல்’, ‘சர்கார்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல படங்களின் போஸ்டர்களை வடிவமைத்த கோபி பிரசன்னா தற்போது, இயக்குநர் மகேந்திரன் மறைவுக்காக படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது திரையுலகினர் மத்தியில் மட்டுமன்றி, சமூக வலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

மகேந்திரன் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ படம் மிகவும் பிரபலம் என்பதால், ரோஜா இதழ்கள் எதுவும் இல்லாமல், வெறும் காம்பு மட்டும் இருப்பது போல் அந்தப் படம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.