ரஜினியின் ‘அண்ணாத்த’ வில்லன் இவரா….?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படம் ‘அண்ணாத்த’படத்தை சிவா இயக்குகிறார் ’வீர்ம்’, ’வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என வெற்றிப்படங்களை கொடுத்தவர் சிவா.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றவுள்ளார். டி.இமான் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதுகிறார்.

இப்படத்தில் காமெடியனாக நடிகர் சூரி இணைந்துள்ளார். இதில் ரஜினியுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை மீனா , குஷ்பூ இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இவர்களுடன் ஸ்ரீமன் மற்றும் விஸ்வாந்த் ஆகியோரும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னணி தெலுங்கு நடிகர் கோபிசந்த் தான் அண்ணாத்த பட வில்லன் என தற்போது செய்தி பரவி வருகிறது. இது உண்மை என்றால் கோபிசந்த் 18 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார்.

ஜெயம் ரவியின் முதல் படமான ஜெயம் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் கோபி சந்த். அதை தொடர்ந்து தற்போது தான் அவர் தமிழ் சினிமாவுக்கு திரும்புகிறார்.