டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் காமெடி என்டர்டெயினர் ஜானரில் உருவாகியிருக்கும் படம் கொரில்லா.

இணைத்த படத்தில் நிஜ சிம்பான்சி நடித்துள்ளது. எனவே, சிம்பான்சியைத் திரைப்படத்தில் நடிக்கவைத்ததற்கு சர்வதேச விலங்குகள் நல அமைப்பான பீட்டா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவிருந்த கொரில்லாவின் ரிலீஸ் தேதி தள்ளி போனது.

விலங்குகள் நல வாரியத்திடம் முறையான அனுமதி பெற்றுதான் அனைத்தும் நடந்துள்ளது எனத் தெரிவித்து வரும் ஜூலை 5ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளது படக்குழு.

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பேனரில் விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்தில் சதீஷ், ராதாரவி, யோகி பாபு நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.