ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கொரில்லா’. இதில் ஜீவா , ஷாலினி பாண்டே , ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்க , ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு , சில பிரச்சினைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 5 ஆக மாற்றப்பட்டது.

இந்நிலையில் நிலையில், மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.