‘தளபதி 64’ படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் கௌரி கிஷன்….!

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.

ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது. ‘தளபதி 64’ படத்தை ரூ.32 கோடிக்கு சன் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் கட்ட ஷூட்டிங் டெல்லியில் துவங்கவுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி – திரிஷாவின் “96” படத்தில் நடித்த கௌரி கிஷான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில் கௌரி கிஷான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-