கவுரி லங்கேஷ் கொலை: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

சென்னை,

ன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து  நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையிலும்,  சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக போராட்டம் நடைபெற்றது.  பத்திரிகையாளர் மன்ற வாயிலில் கவுரி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.

அதேபோல் மெட்ராஸ் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் அமைப்பும் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளது.