சசிகலாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காதது ஏன்?: மன்சூர் அலிகான் கிண்டல்

ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் அமாவாசை.  சையது அகமது  இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று நடந்தது.

மன்சூர் அலிகான்

மேலும்,”இந்த நிலையில தமிழ்நாடு நிலையான ஆட்சி இல்லாமல் தவிக்குது . கவர்னர் முன்னமே சசிகலாவை ஆட்சியமைக்க கூப்பிட்டிருப்பாரு ….இந்தம்மா , அதான் சின்னம்மா ,அரை இன்ச்க்கு மேக்-அப் போட்டுட்டு போயி நின்னதைப்பார்த்து “ப்பா” ன்னு பயந்தவர்  ரெண்டு நாள் காய்ச்சல் ஆயிட்டாரு!” என்று கிண்டலாக பேசினார்.

இதைக்கேட்ட கூட்டத்தினர், “ஜெயலலிதா மரணம்,  தமிழகத்தின்  ஆட்சிக் குழப்பம், பண மதிப்பிழப்பு குறித்தெல்லாம் சீரியஸாக பேசிய மன்சூர், ஏன்  இப்படி மேக் அப்  குறித்தெல்லாம் கிண்டலாக பேசுகிறார்” என்று முணுமுணுத்தனர்.