வந்தாரய்யா கவர்னர்….!

சென்னை,

மிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்  சென்னை வந்தடைந்தார்.

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து, தமிழக கவர்னர் எப்போது சென்னை வருவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் தற்போதுதான்  சென்னை வந்தடைந்துள்ளார்  தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களை தொடர்ந்து தமிழக முதல்வர் பதவியை பிடிக்க சசிகலா முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காபந்து முதல்வராக தொடரும் பன்னீர்செல்வமும், தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக தம்மை பதவியேற்க அழைப்பு விடுக்ககோரியும், அதிமுக எம்எல்ஏக்களால் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதையும் கவர்னரிடம் அளிக்க சசிகலா கடந்த சில நாட்களாக முயன்று வருகிறார்.

ஆனால், கவர்னரோ சென்னை வருவதை தவிர்த்து வந்தார். இதுகுறித்து அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்களை அனைவரும் குடியரசு தலைவரை சந்திக்க செல்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை கவர்னர் சென்னை திரும்புகிறார் என்று நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று மாலை கவர்னர்  சென்னை திரும்பினார்.

அவரை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விமான நிலையம் சென்றுள்ளார்.

இன்று மாலை 5 மணிக்கு ஓபிஎஸ்-ஐ சந்திக்கிறார் கவர்னர். பின்னர் இரவு 7.30 மணிக்கு சசிகலாவை சந்திக்கிறார்.