​மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள்

ரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீடு இடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

download

தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம் மொத்தம் இரண்டாயிரத்து 650 எம்,பி.பி.எஸ் இடங்கள் நிரப்பப்படும். இதில், அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவிகிதம் அதாவது 397 இடங்கள் போக மீதமுள்ள இரண்டாயிரத்து 253 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். .

இதேபோன்று ஆறு தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 760 இடங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் 470 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். மேலும், சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்தமுள்ள நூறு இடங்களில் 65 எம்.பி.பி.எஸ் இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்.