5 கிலோ கூடுதல் அரிசி – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:

மிழகத்தில் கூடுதலாக அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் பாதிக்காத வண்ணம் தமிழக அரசு அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. நேற்றைய தினம் சென்னை உட்படஅனைத்து ஊரட்சிகளிலும், குடிநீர் கட்டணம், சொத்துவரி செலுத்துவதற்கு ஜூன் 30 ம் தேதி வரையில் அவகாசம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.