தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 28ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை!

சென்னை: தமிழகத்தில்  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்டு 28ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 90-க்கும் மேற்பட்ட அரசு, கலை அறிவியல் கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரி களும் மற்றும் 40-க்கும் மேலான பல்கலைக்கழக கல்லூரிகளும் செயல்படுகின்றன.

பொது ஊரடங்கு காரணமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது  நடைபெறும் என கேள்வி எழுந்தது. தனியார் கல்லூரிகளில் ஏற்கனவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 28 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆகஸ்ட் 28 முதல் செப். 4 வரை மாணவர் சேர்க்கையை நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது