நாளை அரசு பேருந்துகள் இயங்காது?

 

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் சங்கங்கள், லாரி, ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்கள் உடப்ட பல அமைப்புகள் இந்த பந்த்தில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்திருக்கின்றன. அரசு ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழக்கத்தின்  சிஐடியூ, தொமுச , ஐஎன்டியூசி, தேமுதிக பேரவை, எச்.எம்.எஸ் உள்ளிட்ட 10 போக்குவரத்து  தொழிற்சங்கங்கள் நாளைய பந்த்தில் கலந்துகொள்ள இருப்பதாக  அறிவித்துள்ளன.

தமிழகம் முழுதும் அரசு போக்குவர்ததுக் கழகங்கள் எட்டு உள்ளன. 24000 பேருந்துகள் இயங்குகின்றன.  சென்னையில் மட்டும்  3500 பேருந்துகளும் 350 மினி பேருந்துகளும் இயங்குகின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஒருநாளைக்கு  700 பேருந்துகள் தமிழகம் முழுதும் செல்கின்றன.

இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் நாளை ஓடாது.