சோனியா பெயரில் அரசு சிமென்ட்: புதுவை அரசு அதிரடி

புதுச்சேரி,

சோனியா காந்தி பெயரில் குறைந்த விலையில் தரமான சிமென்ட் விநியோகம் தொடங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்து உள்ளது.

புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இன்றைய விவாத்தின்போது, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி பேசும்போது, ’காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெயரில் புதுச்சேரியில் தரமான சிமென்ட் வழங்கப்படும்’ என்று கூறினார்.

இந்த சோனியா சிமென்ட் விற்பனை ஒரு மாதத்துக்குள் விநியோகிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி புதுச்சேரியில் தொழிற்சாலைகளின் சுகாதாரத்தன்மை குறித்து ஆய்வு நடத்த குழு அமைக்கப்படும் என்றும், மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அம்மா சிமெண்ட் என்று தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அறிவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.