” முத்தலாக் சட்டம் கொண்டு வருவது உறுதி ”- பிரதமர் மோடி

எதிர்கட்சிகளின் தடைகளை மீறி முத்தலாக் சட்டம் இந்தியாவில் கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பாஜக மகளிர் அணியினரின் 5வது தேசிய மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெர்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ 70 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முந்தய அரசுகள் பெண்களுக்கு அடிப்படை வசதிகள் எதையும் செய்யவில்லை. அவர்ள் வாக்குறுதிகளை மட்டுமே அளித்தனர்.

Modi_3

கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டவர்கள் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் செய்வதை தவறிவிட்டனர். சமூக சீர்த்திருத்தம் மற்றும் அணுகுமுறையிலும் அவர்கள் உரிய நேரத்திற்காக காத்துக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக சமூகத்தின் பார்வை பெண் குழந்தைகள் மற்ரும் பெண்கள் மேம்பாட்டை நோக்கியே செல்கிறது. நாட்டின் முதல்முறையாக அரசின் திட்டங்கள் பெண்களை சார்ந்தே உள்ளன.

தூய்மை இந்தியா திட்டம், இலவச எரிவாயு திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் போன்றவை பெரும்பாலும் பெண்களுக்கானதாகவே உள்ளன. நாட்டில் 18 கோடி வங்கி கணக்குகள் பெண்களுக்குரியதாக உள்ளது. பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தில் 75 சதவிகித வீட்டு உரிமையளர்கள் பெண்களாகவே உள்ளனர். அதேப்போல் ஆண்-பெண் விகிதாச்சாரம் அதிகரித்துள்ளன. நாட்டின் பாதுக்காப்புத்துறை அமைச்சர்கள் குழுவில் பெண்கள் இணைந்துள்ளனர்.

கடும் எதிர்ப்பாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தடைகள் இருந்தபோதிலும், முத்தலாக் சட்டத்தை கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. முத்தலாக் சட்டத்தின் மூலம் முஸ்லீம் பெண்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருந்து விடுபட முடியும். அதுமட்டுமில்லாமல் முஸ்லீம் பெண்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்கு அவர்களுடன் ஆண்கள் கட்டாயம் செல்ல வேண்டுமென்ற வரைமுறையும் நீக்கப்பட்டுள்ளது “ என பிரதமர் மோடி பேசியுள்ளார்.